SBI hikes Interest Rates on Fixed Deposits details here: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான (பிக்சட் டெப்பாசிட்) வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. எஸ்பிஐ வங்கி ரூ. 2 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக அதன் இணையதளத்தில் சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மே 10, 2022 முதல் அமலுக்கு வரும்.
மே 4 அன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4.4 சதவீதமாக 40-அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதேநேரம் 7 முதல் 45 நாட்கள் கொண்ட குறுகிய கால பிக்சட் டெபாசிட் (SBI FD) வட்டி விகிதங்களை வங்கி உயர்த்தவில்லை.
SBI திருத்தப்பட்ட FD விகிதங்கள்
எஸ்பிஐ வங்கியின் FD விகிதங்களில் சமீபத்திய திருத்தத்தின்படி, 46 நாட்கள் முதல் 149 நாட்கள் வரையிலான முதிர்வு கொண்ட FDகள் இப்போது 50-அடிப்படை புள்ளி அதிக வருமானத்தை அளிக்கும். ஓராண்டுக்கு மேல் மற்றும் 2 ஆண்டுகளுக்கு குறைவான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 40-அடிப்படை புள்ளிகளால் உயர்த்தப்பட்டுள்ளது. 2 முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 65 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
3 முதல் 5 ஆண்டுகள் மற்றும் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால FDகளுக்கு, விகிதங்களின் உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. இந்த டெபாசிட்டுகளுக்கு இப்போது 4.5 சதவீத வட்டி கிடைக்கும், இது முன்பு 3.6 சதவீதமாக இருந்தது.
7 முதல் 45 நாட்கள் – 3 சதவீதம்
46 முதல் 179 நாட்கள் – 3.5 சதவீதம்
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை – 3.5 சதவீதம்
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 3.75 சதவீதம்
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை – 4 சதவீதம்
இதையும் படியுங்கள்: ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்; இத செஞ்சு ஈஸியா ட்ராவல் பண்ணுங்க!
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 4.25 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 4.5 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை – 4.5 சதவீதம்
இதற்கிடையில், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் எல்லா காலத்திற்கும் சாதாரண வட்டி விகிதங்களை விட 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாக இருக்கும்.