இலங்கை பிரதமர் கோத்தபய ராஜபக்சே பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று ராஜினாமா செய்தார்.
பிரதமர் ராஜினாமா செய்து விட்டதால், இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு புதிய அமைச்சரவை மற்றும் பிரதமரை நாட்டுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதிய அமைச்சரவை உருவாக்கப்படவில்லையென்றால், அதிபர் கோத்தபய பதவி விலக நேரிடும் எனக் கூறப்படுகிறது.
அதிபர், பிரதமர் என இருவரும் பதவியில் இல்லையென்றால் நாடாளுமன்ற சபாநாயகர் நாட்டின் அதிபராகப் பதவியேற்க வேண்டும்.
சபாநாயகர் அதிபராகப் பதவியேற்கவில்லையெனில், நாடாளுமன்றம் ஏகமானதாக புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிபராக பதவியேற்க யாரும் முன்வரவில்லை என்றால், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
50 மில்லியன் டாலர் மட்டுமே வைத்திருக்கும் இலங்கையால் தற்போது தேர்தல் நடத்தச் சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்பதால், பிரதமர் தலைமையிலான நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் 19-வது சட்டத்திருத்தத்தை அதிபர் கொண்டுவரலாம்.
19-வது சட்டத்திருத்தத்தில் சில அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால், புதிதாக 21-வது சட்டத்திருத்தத்தை கொண்டு வரலாம், இது நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் வழங்கும்.
இதில் எதுவும் சாத்தியப்படவில்லையெனில், பொதுமக்களின் கருத்தைக் கேட்டு, அதன்படி ஒரு முடிவை எடுக்கலாம்.