பிரித்தானிய நாட்டின் எல்லைகளின் ஒருமைபாட்டை அரசாங்கம் நிச்சயமாக பாதுகாக்கும் என இளவரசர் சார்லஸ் தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நடைப்பெறாமல் இருந்த நாடாளுமன்ற அரசு திறப்பு விழாவானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
அப்போது, நாடாளுமன்ற உறையில் பேசிய இளவரசர் சார்லஸ், பிரித்தானிய நாட்டின் எல்லைகளின் ஒருமைபாட்டை அரசாங்கம் நிச்சியமாக பாதுகாக்கும் என்றும், முறைகேடான மற்றும் அபத்தான நீர்வழிகளை மக்கள் கடப்பதையும் அரசாங்கம் பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார்.
Prince Charles says the govt will ‘protect the integrity of the UK’s borders’ and work to “prevent dangerous and illegal channel crossings”. He added that it will ‘champion security around the world’ and “maintain a united NATO”.https://t.co/LigbAIZxVl
📺 Sky 501 and YouTube pic.twitter.com/Q9Sbql28C2
— Sky News (@SkyNews) May 10, 2022
இத்துடன் இவை உலகம் முழுவதும் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், நோட்டோ கூட்டமைப்பை பராமரிக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவும், பலப்படுத்தவும் அரசு நிச்சியமாக ஈடுபடும் என்றும், வாழ்க்கை செலவு பிரச்சனைகளை கலைய அரசு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதில் பிரித்தானிய ராணியின் நடமாட்டம் தொடர்பான பிரச்சனைகளால் ராணியின் உரையை வாசித்த இளவரசை சார்லஸ் நாடாளுமன்ற சபையில் வாசித்தார்.
கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நாடாளுமன்றத்தின் ஆடம்பரமான அரசுத் திறப்பு விழாவை பிரித்தானிய ராணி தவறவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு பிரிச்சனைகளை சரிசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்துள்ள இத்தகைய பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை முழுவதுமாக அரசாங்கத்தால் மட்டும் தீர்க்க முடியாது எனவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: புதிய விதிகளை நீக்காவிட்டால்…ஆப்கானில் தங்களது நடவடிக்கையை தொடங்குவோம் என அமெரிக்க எச்சரிக்கை!
ஏனென்றால், ஆற்றல் பயன்பாட்டு தொகை , வரி குறைப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பான 22மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வருங்கால அறிவிப்புகள் அரசு அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.