இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட மறைந்த புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் உள்ளிட்ட நான்கு இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் டெல்லியில் ஆயிரக்கணக்கான சடலங்கள் ஒரே நேரத்தில் எரியூட்டப்பட்டிருந்ததை மறைந்த டேனிஷ் சித்திக் புகைப்படமாக எடுத்திருந்தார்.
அந்த புகைப்படத்திற்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்தியாவை சேர்ந்த அட்னன் அபிதி, சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் ஆகியோருக்கும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது.