மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மறைந்திருக்கும் திருகோணமலை கடற்படை முகாம் முன் மக்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து, இன்று காலை முன்னாள் பிரதமர் மகிந்த குடும்பத்துடன் ஹெலிகாப்டர் மூலம் திகோணாமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு தப்பிச்சென்றதாக செய்திகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து, எம்.பி.நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டர் மூலம் கொழும்பிலிருந்து தப்பிச்செல்லும் காணொளியும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனிடையே, மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் திருகோணமலையிலிருந்து கப்பல் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவிவருகின்றன.
— Arjun Ravi 🇱🇰 (@ArjunRavi96) May 10, 2022
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச குடும்பத்துடம் மறைந்திருப்பதாக கூறப்படும் திருகோணமலை கடற்படை முகாம் முன் குவிந்துள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்படை முகாம் முன் மக்கள் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Protest Near Trincomalee Navy#GoHomeGota pic.twitter.com/IHca50j8o5
— Arjun Ravi 🇱🇰 (@ArjunRavi96) May 10, 2022
ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்க இலங்கையில் வன்முறைகள் வெடிக்கலாம்! முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை