“மணல் கடத்துபவரையெல்லாம் அமைச்சராக்கினால் இப்படித்தான்” – அண்ணாமலை சாடல்

கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “இலங்கையில் நிலைமை மோசமாக இருக்கிறது. இலங்கைக்கு அண்டை நாடு என்கிற அடிப்படையிலும், தமிழக மக்களின் நலன் கருதியும் உதவி செய்கிறோம். இங்குள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்.

அண்ணாமலை

இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு இந்தியா மருந்து கொடுத்து வருகிறது. அங்கிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கக் கூடாது, என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு.” என்றவர் 2 பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம் என திமுக தர்மபுரி எம்.பி செந்தில் சொல்லிய கருத்துக்கு, “ஜனநாயகத்துக்கு எதிரான கட்சியில் சாதாரண தொண்டர்கள் சேர்வதே கடினம்.

திமுக

திமுகவில் இணைவது தற்கொலைக்கு சமம். பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கபட்ட யாரும் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள். காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும். 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் திமுக என்ற கட்சி இருக்காது.

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அதே நிலை திமுகவுக்கு வரும். பிரசாந்த் கிஷோர் மீண்டும் தமிழகம் வந்து, திமுகவுடன் ஒப்பந்தம் போட்டு கட்சியை வளர்ப்பார். திருமாவளவனை விவாதத்துக்கு அழைத்தேன். அப்போது அந்த கட்சியிலிருந்து ஒரு தம்பி வந்து, ‘நான் விவாதத்துக்கு வருகிறேன்.’ என்றார்.

திருமாவளவன்

ஆனால் திருமாவளவன், ‘அங்கு யாரும் செல்ல வேண்டாம்’ என சொல்லிவிட்டார். நான் மூன்று புத்தகங்கள் அவருக்கு அனுப்பிவிட்டேன். அங்கிருந்து எதுவும் வரவில்லை. விவாதத்துக்கும் வரவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்னே கோவையில் லூலு மால் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால், லூலு மால் வருவதற்கு ஏதோ இப்போது ஒப்பந்தம் போட்டதாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

மின்வெட்டு

மின் தட்டுபாடு எதனால் ஏற்படுகிறது என்று அமைச்சரிடம் கேட்டால், ‘நிலக்கிரி தட்டுப்பாடு’ என்கிறார்கள். தமிழகத்தில் மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் பேசுவார்கள்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.