கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் மரம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கேன்டர் லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கண்டமங்கலம்
அடுத்த பள்ளித் தென்னல் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோர மரத்தில் மோதியது. இதில் மரம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்தது. லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்தது. டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் தப்பினர். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையிலான போலீசார், மரத்தை வெட்டி அகற்றி போக்கு வரத்தை சரி செய்தனர். இச்சம்பவத்தால் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் மரம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.