உஜ்ஜன்:
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜனி அருகே உள்ள அஸ்லானா கிராமத்தில் கோமல், நிகிதா, கரிஷ்மா ஆகிய 3 அக்காள் தங்கைகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். மணமகன்களும் திருமண உடை அணிந்து தயாரானார்கள்.
மணமகள்கள் 3 பேரும் தனித்தனி அறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டனர். பின்னர் சகோதரிகள் 3 பேரும் முகத்தை முடியவாறு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு மணமகன்கள் அருகே அமர வைக்கப்பட்டனர்.
இதில் சகோதரிகள் ஒரே உடைகள் அணிந்து இருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் திருமண மண்டபம் முழுவதும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்பட்டது. அங்கு ஜெனரேட்டர் வசதியும் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் மணமக்களின் உறவினர்கள் தவித்தனர்.
திருமணத்திற்கான நேரமும் நெருங்கியது. மணமக்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் மின்சாரம் மீண்டும் வந்தது. அப்போது தான் 2 சகோதரிகள் மணமகனுடன் இடம் மாறி இருந்த விவரம் தெரியவந்தது.