மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் மோடி; செவிசாய்க்கும் மேக்ரான்| Dinamalar

பாரிஸ்: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி ஆதரித்துவரும் நிலையில் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் இதனை ஏற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாராகும் பொருட்களை வாங்கி பயன்படுத்த அவர் வலியுறுத்தி வரும் நிலையில் இதனால் உள்நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிக பயன் பெறுவர் என்று கூறியுள்ளார்.

தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வர்த்தக தொடர்பில் இருக்க பிரான்ஸ் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன. பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு, சர்வதேச விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஆகியவற்றை மேக் இன் இந்தியா திட்டம் மூலமாக கையாள பிரான்ஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியாக விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்திருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இரு நாடுகளும் இணைந்து விவாதிக்க இமானுவேல் மேக்ரான் மற்றும் மோடி சந்திப்பு உதவியது.

latest tamil news

மேலும் பாதுகாப்புத் துறையை பலப்படுத்த இந்த சந்திப்பில் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே சக்தி, வருணா, கருடா உள்ளிட்ட இந்தியா-பிரான்ஸ் நாடுகள் இணைந்து செயல்படும் கூட்டுப்பயிற்சி திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை அடுத்து இரு நாடுகள் இடையே உள்ள கடற்படை கூட்டு பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டம் வாயிலாக பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க தற்போது பிரான்ஸ் இமானுவேல் மேக்ரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக வருங்காலத்தில் இந்திய நிறுவனங்கள் பல அதிக லாபம் ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.