மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளுக்கு நடைபெற்ற திருமணத்தில், தொடர் மின்வெட்டு காரணமாக இருவரும் வெவ்வேறு மாப்பிள்ளைகளை தவறுதலாக மாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள அஸ்லானா கிராமத்தில், ரமேஷ்லாலின் இரண்டு மகள்களான நிகிதா மற்றும் கரிஷ்மா ஆகிய இருவரையும், வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த டங்வாரா போலா மற்றும் கணேஷ் ஆகிய இரு மணமகன்களுக்கு திருமணம் செய்து வைக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மணப்பெண்கள் இருவரும் தலையை மூடி, ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்த நிலையில், தொடர் மின்வெட்டினால் மின்சாரம் இல்லாத காரணத்தால் இருவருக்கும் மாப்பிள்ளைகளை மாற்றி திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மணப்பெண்கள் மணமகன்களின் இல்லத்தை அடைந்தபோதுதான் இந்த தவறு குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இந்த சூழலில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் இந்த மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து மூன்று குடும்பங்களுக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது.
இருப்பினும், பின்னர் இரு குடும்பத்தினரும் சமரசம் செய்துகொண்டு, சரியான மணமகனும், மணமகளும் மறுநாள் மீண்டும் ஒரு முறை திருமண சடங்குகளை செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM