ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் அதிக லாபம் பார்த்த ரிலையன்ஸ்.. எப்படி தெரியுமா..?

உலக நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கும் போது சற்றும் எதிர்பார்க்காத விதமாக விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசு உக்ரைன் மீது போர் தொடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் பொருளாதாரம், வர்த்தகப் பின்னடைவுக்கு வழிவகுத்தது.

இந்தப் போர் காரணமாக முதலில் அதிகம் பாதிக்கப்பட்டது கச்சா எண்ணெய் தான். ஆனால் இதே கச்சா எண்ணெய்யில் தான் முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகி அதிக லாபம் பார்த்துள்ளார்.

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி… ஜப்பானின் புதிய தடை.. உலக நாடுகளுக்கு என்ன பிரச்சனை?

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் – ரஷ்யா போர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு மத்தியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவானது. இதனால் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கி, எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு அதிகப்படியான சந்தை விலையில் விற்பனை செய்தது மூலம் அதிகப்படியான லாபத்தைப் பெற்றுள்ளார்.

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

ரஷ்யா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உட்படப் பல நாடுகள் தடை விதித்த நிலையில், ரஷ்யா அதிகப்படியான தள்ளுபடியில் கச்சா எண்ணெய்-ஐ விற்பனை செய்யத் துவங்கியது. இதேவேளையில் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் டீசல் மற்றும் பிற எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கி டீசல் மற்றும் நேப்தா ஆகியவற்றை அதிகப்படியான சந்தை விலைக்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது.

மெயின்டனன்ஸ் பணிகள்

மெயின்டனன்ஸ் பணிகள்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிப்ரவரி, மார்ச் மாதம் தனது சுத்திகரிப்பு ஆலையில் முக்கியமான பகுதியை மெயின்டனன்ஸ் பணிகள் செய்யத் திட்டமிட்டு இருந்தது, ஆனால் புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகும் காரணத்தால் மெயின்டனன்ஸ் பணிகளை ஒத்திவைத்தது. இதனால் மூலம் மார்ச் காலாண்டில் இப்பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற்றது.

14 லட்சம் பேரல்

14 லட்சம் பேரல்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு நாளுக்கு 14 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புச் செய்ய முடியும், இதனால் இந்தச் சப்ளை டிமாண்ட் பிரச்சனையைப் பயன்படுத்திக் குறுகிய காலகட்டத்தில் அதிகளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

வருவாய் அளவீடுகள்

வருவாய் அளவீடுகள்

மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் மற்றும் கெமிக்கல் வணிகப் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டு ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.1.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் எண்ணெய் எரிவாயு வணிகம் ரூ.848 கோடியில் இருந்து ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani’s Reliance makes more money from Russia – Ukraine war

Mukesh Ambani’s Reliance makes more money from Russia – Ukraine war ரஷ்யா – உக்ரைன் போரைப் பயன்படுத்தி அதிக லாபம் பார்த்த ரிலையன்ஸ்.. எப்படித் தெரியுமா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.