கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அம்மாநில காவல்துறையினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது:
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளம் மிக்க நாடாக மாறும் போது, அசாமில் உள்ள இளைஞர்கள் அதன் மூலம் பயனடைவார்கள்.
வடகிழக்கின் அனைத்து தலைநகரங்களும் ரயில் பாதை மூலம் இணைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அசாம் மாநிலம் வெள்ள பாதிப்பு இல்லாத மாநிலமாக விரைவில் மாறும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தீவிரவாத அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செய்து கொள்ளப்பட்டன.
தற்போது அசாமில் எந்தவித தீவிரவாத இயக்கமும் செயல்பாட்டில் இல்லை.
தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், தேசிய நீரோட்டத்தில் சேர்ந்து ஆயுதங்களை கைவிட்டுள்ளனர்.
அண்டை மாநிலத்துடனான எல்லை பிரச்சினைக்கு 70 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் காவல்துறையின் தலைமை இயக்குனர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்…2 இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு