இன்றைய காலக்கட்டத்தில் நரை முடி பிரச்சனை அனைவரையும் அதிகமாக பாதிக்கின்றது. முன்னர் நடுவயதினரை கவலைக்குள்ளாக்கிய நரை முடி பிரச்சனை, இப்போது சிறு வயது முதலே காணப்படுகின்றது.
இதற்கான காரணங்களில் முக்கியமானவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கமாகும்.
மக்கள் பெரும்பாலும் வெள்ளை முடியை மறைக்க பல முடி பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பொருட்களில் பல இரசாயனங்களும் இருப்பதால், இவை பிரச்சனைகளை அதிகமாக்குகின்றன.
இதனை இயற்கைமுறையில் கூட போக்கலாம். அந்தவகையில் தற்போது இயற்கை முறையில் எப்படி வெள்ளை முடியை விரட்டலாம் என்பதை பார்ப்போம்.
- நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் வெள்ளை முடி கருமையாகிவிடும். 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை போட்டு ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும். ஆறிய பின் தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். பின்னர் 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
- 1 தேக்கரண்டி கருஞ்சீரகத்தில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இப்போது முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும், பின்னர் 1 மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
- 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கொதிக்க வைத்து அதில் மருதாணி இலைகளைப் போடவும். மருதாணியின் நிறம் எண்ணெயில் வர ஆரம்பித்ததும், கேஸ்ஸை அனைக்கவும். இந்த எண்ணையை தலைமுடியில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும்.
-
கறிவேப்பிலையில் உயிர்-செயலில் உள்ள பொருட்கள் உள்ளன, இது முடிக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவினால் நரை முடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.