உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கமானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் சீனாவில் பல முக்கிய நகரங்களிலும் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய உற்பத்தி நாடான சீனா கொரோனாவினால் திணறி வரும் நிலையில், அங்கு உற்பத்தியானது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் சப்ளை சங்கிலியில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி பாதிக்கலாம்
இந்த நிலையில் சீனாவிலும் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் சப்ளை சங்கிலியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக உதிரி பாகங்கள் சப்ளையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கணினி மற்றும் மின்சாதன பொருட்கள் உற்பத்தியானது பெரிதும் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் & குன்ஷான் லாக்டவுனால் பாதிப்பு
குறிப்பாக சீனாவின் முக்கிய தொழில் நகரமான ஷாங்காய் பாதிப்பால், உலகளவில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மூலதன பொருட்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதே சீனாவின் இரண்டாவது பெரிய நகரமான குன்ஷானனில் விதிகப்பட்டுள்ள கட்டுப்பாட்டினால், பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. இது உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான முக்கிய உதிரி பாகங்கள் சப்ளையராக திகழ்ந்து வரும் ஒரு நகரமாகும்.
உற்பத்தியில் தாக்கம்
சர்வதேச நாடுகளில் பலவும் சீனாவின் உதிரி பாகங்களை சார்ந்திருப்பதால், அது உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அண்டை நாடுகளின் உற்பத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சப்ளையில் சரிவு
இது குறித்து கோத்ரெஜ் அப்ளையன்சஸின் நிர்வாக துணைத் தலைவருமான கமல் நந்தி, ஏற்கனவே சப்ளையில் சரிவு ஏற்பட்டுள்ளது. லாக்டவுன் ஜூன் வரை தொடர்ந்தால் அது மேற்கோண்டு தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். சீனா தனது லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் தான் இந்த நிலைமை சீரடையக் கூடும் என தெரிவித்துள்ளார்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மூன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. சீனாவின் சில முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது உற்பத்தியினை பாதித்துள்ளது. இதன் காரணமாக கப்பல்கள் காலியாக பயணிக்கின்றன. கப்பல்கள் தவிர்க்கப்படுகின்றன. ஷிப்மென்ட் விலை இப்போது நிலையாக உள்ளது என்பது சாதகமான அம்சமாக உள்ளது என்று பானாசோனிக் இந்தியாவின் தெற்காசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் ஷர்மா கூறியுள்ளார்.
ஏற்றுமதி விகிதம்
கடந்த பிப்ரவரியில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2013 – 14ல் 6.6 பில்லியன் டாலரில் இருந்து, 2021 – 22ல் 12.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 88 சதவீதம் அதிகரித்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மொபைல்போன்கள், ஐடி ஹார்டுவேர் பொருட்கள், மடிக் கணினிகள் மற்றும் டெப் லெட் கணினிகள், டிவிக்கள், ஆடியோ பொருட்கள், நுகர்வோர் மின் பொருட்கள், தொழில்துறை மின்னணு பொருட்கள், ஆட்டோ எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.
விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்
உதிரி பாகங்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் ஏற்கனவே விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் சரிவு, இன்னும் விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். ஏற்கனவே டிசம்பர் 2020 முதல் உற்பத்தி செலவானது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொழில் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 காலாண்டுகளிலும், காலாண்டுக்கு 3% விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் உற்பத்தியாளார்கள் விலை உயர்த்துவதை தவிர வேறு வழியின்றி உள்ளனர்.
பிரச்சனை ஏற்படலாம்
அடுத்த இரண்டு வாரங்களில் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் சப்ளையில் இன்னும் பிரச்சனை அதிகரிக்கலாம். உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் கம்ப்ரசர்கள் மற்றும் வாஷிங்மெஷின்களுக்கு தேவையான பாகங்களில் பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு கோடைகாலங்களில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மூலதன பற்றாக்குறையால் விலை அதிகரித்துள்ளது.
இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
சீனாவில் லாகிஸ்டிக்ஸ் செலவினங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளது. லாக்டவுன் காரணமாக துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது சீனாவினை சார்ந்திருக்கும் நாடுகளை மாற்று வழிகளை தேட வழிவகுத்துள்ளன. ஆக இந்த சமயத்தில் இந்தியா சரியான சூழலை பயன்படுத்திக் கொண்டால், இந்தியா பெரும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் உலக நாடுகளுக்கே சப்ளையராக மாறக்கூடும்.
இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி
இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் மதிப்பானது 2011 – 12ம் ஆண்டில் இருந்து, 57.56 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2021 – 22ல் 94.22 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. எனினும் ஏற்றுமதியானது குறைவு தான்.
உலகளாவிய உற்பத்தி மையம்
2030க்குள் இந்தியாவை உலகளவிய ட்ரோன் உற்பத்தி மையமாக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது, குறிப்பாக பி எல் ஐ திட்டத்தினை ஊக்குவித்துள்ளது. இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்க முடியும்.
shanghai lockdown may open yet another window for india
shanghai lockdown may open yet another window for india/ஷாங்காய் லாக்டவுன்.. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..!