பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் பங்கு தேர்வு என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். அதே போல சரியான நேரத்தில் நுழைவதும், சரியான நேரத்தில் வெளியேறுவதும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.
அதே போல நீண்டகால நோக்கில் வாங்கிய ஒரு பங்கினில் நல்ல லாபம் கிடைத்துள்ள நிலையில், அதிலிருந்து வெளியேறலாமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கின் பெயர் சிம்பொனி லிமிடெட். இது நீண்டகால நோக்கில் எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது. தற்போது இப்பங்கினில் இருந்து வெளியேறலாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
1 வருடத்தில் இருமடங்கு லாபம்.. இன்னும் லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்!
பங்கு விலை ஏற்றம்
சிம்பொனி லிமிடெட் பங்கு விலையானது கடந்த 5 ஆண்டுகளில் 24 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 82 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது கடந்த 2007 – 2017ம் ஆண்டிற்கிடையில் 72,725 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 15 ஆண்டுகளில் 55,337 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
வளர்ச்சி விகிதம் எப்படி?
இந்த நிறுவனம் அதன் 4வது காலாண்டு முடிவினை வெளியிட்ட நிலையில், இப்பங்கினை வாங்கலாம் என்ற பரிந்துரையை தொடர்ந்து வருகின்றனர். எனினும் இந்த நிறுவனம் 4வது காலாண்டில் ஒரு கலவையான செயல் திறனை காட்டியுள்ளது. வருவாய் வளர்ச்சி விகிதமானது குறைந்துள்ள நிலையில், அது மார்ஜின் விகிதத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த லாபம்
கடந்த மே 3 அன்று வெளியிடப்பட்ட இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 1.58% அதிகரித்து, 64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 63 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதம் 13.27% அதிகரித்து, 384 கோடி ரூபாயாக (இது மதிப்பாய்வில் உள்ளது) அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 339 கோடி ரூபாயாக இருந்தது.
தரகு நிறுவனம் என்ன சொல்கிறது?
யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் CAGR விகிதம் 2022 – 2024ம் நிதியாண்டில் 17 சதவீதம் அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இதன் இலக்கு விலையினை 1215 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. எனினும் அதிகளவிலான அன்னிய செயல்பாட்டு செலவாணியை கருத்தில் கொண்டு, FY2021 – 2024E அதன் எபிட்டா விகிதம் முறையே 31% மற்றும் 33% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ஜின் மீட்பு என்பது சவாலான ஒரு விஷயமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் என்ன செய்கிறது?
சிம்பொனி நிறுவனம் மிகப்பெரிய ஏர் கூலர் உற்பத்தியாளராகும். தற்போதைய நிலவரப்படி 60 நாடுகளில் செயல்பட்டு வருகின்றது. வீட்டிற்கு தேவையான ஏர் கூலர் சம்பந்தமான பொருட்கள், தொழில் துறை, வணிக துறைகளுக்கு தேவையான பொருட்கள் என பலவற்றையும் உற்பத்தி செய்து வருகின்றது. இது 30,000-க்கும் மேற்பட்ட டீலர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 1000 டீலர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களையும் கொண்டுள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது?
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இப்பங்கினை ஹோல்ட் செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலையாக 1215 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இப்பங்கின் விலையானது சற்று சரிந்துள்ள நிலையில், தற்போது அதிகரித்துள்ள அதன் சப்ளை உள்ளிட்ட சில சாதகமான காரணிகளுக்கு மத்தியில், வளர்ச்சி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாமென தரகு நிறுவனம் கணித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ்
ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் அதன் இலக்கு விலையை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது உள்நாட்டில் வளர்ச்சி விகிதமானது மேம்பட்டு வரும் நிலையில், விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வலுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். இதற்கிடையில் இப்பங்கானது அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இன்றைய பங்கு நிலவரம் என்ன?
சிம்பொனி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 3.12% சரிவினைக் கண்டு, 1075.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று இதன் உச்சம் 1130.90 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 1070.15 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1215 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 890 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 3.22% சரிவினைக் கண்டு, 1073 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவரையில் இன்றைய உச்சம் 1131.25 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 1070.85 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1214 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 890 ரூபாயாகும்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
55,000% up in 15 years; 25% fall in last 5 years: Will it increase further? What do the experts say?
55,000% up in 15 years; 25% fall in last 5 years: Will it increase further? What do the experts say?/15 ஆண்டுகளில் 55,000% ஏற்றம்.. 5 வருடத்தில் 25% சரிவு.. இனி என்ன செய்யலாம்?