வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : விதிகளை மீறி வெளிநாட்டு நன்கொடை பெற்றுத்தந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., தயாராகி வருகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த விதிமுறைகளை மீறி நன்கொடை பெற்று தரும் பணியில், மத்திய உள்துறை, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் இடைத்தரகர்கள் ஈடுபட்டனர். சென்னை, கோவை, டில்லி உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன.
பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டு நன்கொடை பெற உதவிய ஆறு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு கோடி ரூபாய் வரை, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நாடு தழுவிய அளவில், பலர் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
Advertisement