அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் சரி, இந்தியாவில் ஐபிஓ வெளியிட்ட டெக் மற்றும் டிஜிட்டல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் சரி 2022ல் மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக அமெரிக்க டெக் நிறுவனங்கள் மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு மிகப்பெரிய இழப்பைக் கொடுத்து, டெக் பங்குகள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?
இந்த நிலையில் முன்னணி முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல் டெக் பங்குகள் சரிவின் மூலம் மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது.
டைகர் குளோபல்
நியூயார்க் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டைகர் குளோபல் இந்த ஆண்டுத் தொழில்நுட்ப பங்குகளின் அதிகப்படியான விற்பனை மூலம் சுமார் $17 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது. டைகர் குளோபல் நிறுவனத்தின் 17 பில்லியன் டாலர் நஷ்டம் ஹெட்ஜ் பண்ட் பிரிவில் வரலாற்றுச் சரிவாகப் பதிவாகியுள்ளது.
ஹெட்ஜ் பண்ட்
உலகின் மிகப்பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டைகர் குளோபல் கடந்த நான்கு மாதங்களில் அதன் முதலீட்டின் மூலம் கிடைத்த ஒட்டுமொத்த வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கை இழந்துள்ளது என்று LCH இன்வெஸ்ட்மென்ட்ஸ் கணக்கீட்டு அறிவித்துள்ளது.
லாபம் சரியும்
சந்தையில் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி பங்குகள் பாதிக்கப்பட்டுள்ள இதே வேளையில், வட்டி விகிதங்களும் உயரும் காரணத்தால் முதலீட்டு நிறுவனங்களின் லாப அளவீடுகள் அதிகளவில் பாதிக்கும்.
இந்தியா
டைகர் குளோபல் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. 2015 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 136 ஒப்பந்தம் மூலம் சுமார் 12.37 பில்லியன் டாலர் தொகையை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளது.
7 பில்லியன் டாலர்
கடந்த ஆண்டு, டைகர் குளோபல் நிறுவனம் சுமார் 47 ஒப்பந்தங்களில் 7 பில்லியன் டாலர்களை இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தீவிரமான முதலீட்டின் வாயிலாகவே பல ஸ்டார்ட்அப் யூனிகார்ன் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகியுள்ளது.
56.64 சதவீத தொகை
இந்த 7 பில்லியன் டாலர் என்பது 2015 இல் செய்த அதிகப்படியான முதலீட்டை விடவும் அதிகமாகும். மேலும் டைகர் குளோபல் இந்தியாவில் முதலீடு செய்துள்ள மொத்த தொகையில் 56.64 சதவீதமும், 34 சதவீத ஒப்பந்தங்களும் 2021ஆம் ஆண்டில் செய்துள்ளது.
Tiger Global lost by $17 billion in tech shares massive sell-off
Tiger Global lost by $17 billion in tech shares massive sell-off 5 மாதத்தில் 17 பில்லியன் டாலரை இழப்பு.. கண்ணீரில் டைகர் குளோபல்..!