Kitchen Tips: வெள்ளரிகளை உறைய வைக்க முடியுமா? 3 ஸ்டெப்ஸ் தான்.. எப்படினு பாருங்க!

வீட்டில் வெள்ளரி வளர்க்கும் எவருக்கும் ஒரே ஒரு செடியில் நிறைய பழங்கள் கிடைக்கும் என்பது தெரியும். இது இயற்கையாகவே வெள்ளரிகளை உறைய வைக்கலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கு வழிவகுக்கிறது.

வெள்ளரிகளை எப்படி உறைய வைப்பது, உறைந்த வெள்ளரிகள் எவ்வளவு காலம் நீடிக்கும், உறைந்த வெள்ளரிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

வெள்ளரிகளை உறைய வைக்க முடியுமா?

ஆம், நீங்கள் வெள்ளரிகளை உறைய வைக்கலாம், ஆனால் உறைந்த வெள்ளரிகள் புதிய வெள்ளரிகள் போன்ற மிருதுவான ஸ்னாப்பைக் கொண்டிருக்காது. வெள்ளரிகள் சுமார் 95% நீரைக் கொண்டிருக்கின்றன, உறைந்த வெள்ளரிகளை சூப்கள், டிப்ஸ் அல்லது ஸ்மூத்தி செய்ய பயன்படுத்தலாம், ஆனால் சாலட் அல்லது சாண்ட்விச் தயாரிக்கிறீர்கள் என்றால், புதிய வெள்ளரிக்காய் பயன்படுத்துவது நல்லது.

வெள்ளரிகளை உறைய வைப்பது எப்படி?

முதலில் வெள்ளரிகளை சுத்தம் செய்யுங்கள். தோட்டத்தில் வளர்க்கப்படும் வெள்ளரிகள் தண்ணீரில் கழுவ வேண்டும், அதேநேரம் கடையில் வாங்கும் வெள்ளரிகளில் மெழுகு பூச்சு இருக்கலாம், அதை தண்ணீர் மற்றும் வெஜிடபிள் வாஷ் கொண்டு கழுவி அகற்ற வேண்டும்.

குறிப்பு!

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 1 கப் வினிகர், 4 கப் தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நீங்களே சொந்தமாக வெஜிடபிள் செய்யலாம். இப்போது வெள்ளரிகளை ஒரு வடிகட்டியில் வைத்து, ஸ்பிரே தெளிக்கவும், பின்னர் 2-5 நிமிடங்கள் கழித்து, வெஜிடபிள் பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும்.

குக்கீ ஷீட் முறை

கழுவிய வெள்ளரிகளை மெல்லிய, சீரான துண்டுகளாக நறுக்கவும். நீங்கள் விரும்பினால் தோலை அகற்றலாம், ஆனால் அது தேவையில்லை. பார்ச்மெண்ட் பேப்பர் உடன் பேக்கிங் ஷீட்டை வரிசைப்படுத்தவும்.

வெள்ளரி துண்டுகளை’ தாளில் ஒரு அடுக்கில் வைத்து, பிரிசரில் சில மணிநேரங்களுக்கு வைக்கவும். ஃப்ரீசரில் இருந்து வெள்ளரித் துண்டுகளை அகற்றி, ஜிப்-லாக் பை அல்லது காற்றுப் புகாத கன்டெய்னரில் மாற்றி மீண்டும் பிரிசரில் வைக்கவும்.

ஐஸ் கியூப் முறை

வெள்ளரிகளை மெல்லியதாக நறுக்கி, ஐஸ் கியூப் ட்ரேயில் வைக்கவும்.

நீங்கள் பானங்களுக்கு இவற்றைப் பயன்படுத்தினால், எலுமிச்சை சாறு அல்லது பல்வேறு மூலிகைகள் சேர்க்கலாம். ஐஸ் கியூப் ட்ரேயை ஃப்ரீசரில் வைக்கவும்.

பியூரி முறை

ஒரு ஃபுட் பிராசஸரில் வெள்ளரிகள் மென்மையாகும் வரை கலக்கவும்.

ஒரு ஐஸ் கியூப் ட்ரே அல்லது காற்று புகாத டப்பாவில் ப்யூரியை ஊற்றி பிரீசரில் வைக்கவும்.

உறைந்த வெள்ளரிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

சரியாக சேமிக்கப்பட்டால், வெள்ளரிகள் பிரிசரில் ஒரு வருடம் வரை நீடிக்கும்.

இந்த குறிப்பை பயன்படுத்தி, வெள்ளரிகளை உறைய வைத்து’ பல நாட்களுக்கு பயன்படுத்துங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.