Nokia N73: ஞாபகம் வருதே… பெயர் தான் பழசு; ஆனா அம்சமெல்லாம் புதுசு!

ஒரு காலத்தில் பயனர்களின் கனவு நாயகனாக இருந்த
Nokia
, ஒரு பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டு சிறிது காலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும், நிறுவனம் பட்ஜெட் மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில்,
நோக்கியா
நிறுவனம் புதிய பிளாக்‌ஷிப் Nokia 10 ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாகத் தகவல் வெளியானது. இந்த சூழலில், நிறுவனம் இனி பிளாக்‌ஷிப் மாடல்களை தயாரிக்க முக்கியதுவம் அளிக்காது என்று கூறப்பட்டது.

இப்படியாக பலத் தகவல்கள் இணையத்தைச் சுற்றி வந்த வேளையில், நிறுவனம் புதிய
நோக்கியா என்73
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் மிகப் பிரபலமான மாடல் Nokia N73 என்பது அனைவரும் அறிந்ததே.

ஸ்மார்ட்போன்கள் தலைத்தூக்கிய தொடக்க காலத்தில், வீடியோ அழைப்பு வசதியுடன் சந்தையில் பயனர்களை தன் வசம் இழுத்து வைத்திருந்தது இந்த மாடல்கள். Symbian இயங்குதளத்துடன் முன்னதாக நோக்கியாவின் N தொகுப்பில் வந்த பெரும்பாலான அனைத்து மாடல்களுமே விற்பனையில் வெற்றிக் கண்டது.

Nokia எடுத்த திடீர் முடிவு – இனி இந்த போன்கள் வெளிவராது!

வெளியான Nokia N73 புகைப்படங்கள்

தற்போது, சீன தளத்தில் வெளியான தகவல்களின்படி, நோக்கியா புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. அது பழைய நோக்கியா N73 மாடலின் மேம்பட்ட பதிப்பாக வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த போனை நிறுவனம் இந்திய சந்தைக்குக் கொண்டுவருமா என்பது குறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்
HMD Global
நிறுவனம், ஐந்து கேமராக்கள் கொண்ட மொபைலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியிட்டிருந்தது. அதில், இரண்டு பிளாஷ் லைட்டுகள் இருக்கும் என்று கூறியது. அதுமட்டும் இல்லாமல், பெண்டா கேமரா சென்சார்களைச் சுற்றிலும் சிவப்பு நிற வளையம் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், புதிதாக வெளியான புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, ஐந்து கேமராக்கள், இரண்டு பிளாஷ் லைட்டுகள், சிவப்பு வளையம் என நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது.

நோக்கியா என்73 அம்சங்கள் (Nokia N73 Specifications)

இதுவரை நமக்கு கிடைத்த தகவல்களின்படி, நோக்கியா என்73 மாடல் கேமரா அமைப்பின் முதன்மை சென்சார் 200MP மெகாபிக்சலாக இருக்கலாம். மேலும், இது 2021ஆம் வெளியான சாம்சங் நிறுவனத்தின் ISOCELL HP1 சென்சார் ஆக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

புகைப்படத்தை பார்க்கும்போது, ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்கள் வலதுபுற பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே வளைந்த விளும்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

புதிய நோக்கியா பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை கிடைத்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. வரும் நாள்களில் நிறுவனம் கூடுதல் தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக செய்திகள்:
Motorola: ரோலபிள் ஸ்மார்ட்போன் – மோட்டோ நிறுவனம் மும்முரம்!Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!WhatsApp Update: அட்மினுக்கு அதிகாரம்; பெரிய பைல்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.