யுவன் மேஜிக்குக்கு வயசு 25. நம்ப முடியலைனாலும் அது தான் நிஜம். 90’ஸ் மற்றும் 2கே கிட்ஸின் எப்போதைக்குமான இசை மீட்பராகத் திகழும் யுவனின் எவெர்க்ரீன் ஆல்பங்களை இங்கு பார்ப்போம்.
காதல் கொண்டேன் செல்வராகவன் – யுவன் காம்போ ஆரம்பித்தது இங்குதான். `தேவதையை கண்டேன்’ தொடங்கி ‘நெஞ்சோடு கலந்திடு’ வரை ஆல்பத்தின் எல்லா பாடல்களும் ஹிட். திவ்யா… திவ்யா… காதல் கொண்டேன் என தீம் மியூஸிக்கும் படு வைரல்
7G ரெயின்போ காலனி கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்து பார்த்தால், கண் பேசும் வார்த்தைகள்… பாடல்கள் நிறைந்து கிடக்கும் ஆல்பம் செல்வராகவன்-யுவன் காம்போவில் அடுத்த ஹிட்.
மன்மதன் ‘காதல் வளர்த்தேன்’ என லவ் ஃபீல் பாடலாக இருக்கட்டும் ‘என் ஆச மைதிலியே’ என குத்து பாடலாக இருக்கட்டும் மன்மதன் ஆல்பத்தையே ரிப்பீட்டில் மோடில் கேட்ட 90’ஸ் கிட்ஸ் அதிகம்.
புதுப்பேட்டை ‘ஒரு நாளில் வாழ்க்கை எங்கும்’ பாடல், ஒருவர் தளர்ந்து உட்காரும் போது இசையின் வழியே ஒரு கை வந்து தூக்கிவிடுமென்றால் அது யுவன் இசையாக தான் இருக்கும். கல்ட் படத்திற்கு ஏற்ற கல்ட் இசை.
கற்றது தமிழ் `இன்னும் ஓர் இரவு’ `பறவையே எங்கு இருக்கிறாய்’ என படம் முழுவதும் கதாநாயகன் அலைவதுபோல இசையும் அவன் கூடவே அவன் உணர்வுக்கு எற்றார்போல அலையும்.
பில்லா மை நேம் இஸ் பில்லா, சேவல் கோடி பறக்குதடா பாடல்கள் மாஸ், கிளாஸ் என கலந்து கட்டி அதிர வைத்த ஆல்பம். இதன் பிஜிஎம் எவர்கிரீன்.
சென்னை 600028 ‘உள்ளே வா’ ல ஆரம்பிச்சு ‘சரோஜா சாமாநிகாலோ’ வரையிலான பாடல்கள் தான் இந்த படத்தின் மீது கவனம் வருவதற்கு காரணமாக இருந்தன என்றே சொல்லலாம்.
பையா ‘துளிதுளி மழையாய்’, ‘அடடா மழைடா’, ‘என் காதல் சொல்ல’, ‘பூங்காற்றே பூங்காற்றே’, ‘ஏதோ ஒன்று’ – இந்த பாடல் பெயர்களைச் சொன்னாலே உங்களுக்கே தெரிச்சுருக்கும் பையா எந்தளவு ஹிட் என்பது.
மங்காத்தா `மச்சி ஓப்பன் தி பாட்டில்’ பாடல் இல்லாத பார்ட்டி என்பதே கிடையாது. விளையாட்டு மங்காத்தா, வாடா பின்லேடா என அசத்திய ஆல்பம்.
பியார் பிரேம காதல் `சார் 90ஸ் கிட்ஸ்க்கு காதல் பாடல்கள் நிறைய இருக்கு, எங்களுக்கு?’ என கேட்ட 2k கிட்ஸ்க்காகவே காதல் சொட்ட சொட்ட யுவன் கொடுத்த ஆல்பம். உங்க பேவரைட் எது என்பதை கமென்டில் சொல்லுங்க.