அடிக்கடி தீ பிடிக்கும் மின்சார ஸ்கூட்டர்கள்.. உங்களுடைய இன்சூரன்ஸில் கவர் ஆகுமா?

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில் வாகன பிரியர்கள், இதற்கு மாற்று மின்சார வாகனங்கள் தான் என எண்ணத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் சமீப காலமாக மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இது வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் மின்சார வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

என்னடா இது சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு வந்த சோதனை.. ஆளே இல்லையாம்..!

கவர் ஆகுமா?

கவர் ஆகுமா?

மேலும் மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தால் இன்சூரன்ஸில் கவர் ஆகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே விபத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கும். இது போன்ற அசாம்பாவிதங்கள் கவர் ஆகுமா?

விரிவான காப்பீடு

விரிவான காப்பீடு

ஓரு விரிவான மோட்டார் இன்சூரன்ஸ் என்பது திருட்டு, தனிப்பட்ட விபத்து, பூகம்பம், சூறாவளி, நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவினாலும் ஏற்படும் இழப்புகளை க்ளைம் செய்து கொள்ளலாம். இந்த விரிவான திட்டத்தில் தீ விபத்தும் கவர் ஆகும். இது தனி நபர் முதல் மூன்றாம் நபர் வரையிலான பாதுகாப்பினை வழங்குகின்றது.

என்ன வழி?
 

என்ன வழி?

எனினும் இன்றைய காலகட்டத்தில் தீ விபத்து எதிரான மின்சார வாகனங்களுக்கு என்று எந்த தனிப்பட்ட திட்டங்கள் இல்லை. ஆக விரிவான மோட்டார் இன்சூரன்ஸ் திட்டத்தினை வாங்குவதே சரியான வழியாக இருக்கும். பொதுவாக மூன்றாம் தரப்பு காப்பீட்டில் தீ விபத்துக்கு காப்பீடு இல்லை என்றாலும், தனிப்பட்ட பாலிசியில் தீயினால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு உண்டு.

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

ஒரு வாகனம் தீபிடித்து எரிவதில் மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.

ஒன்று வாகனம் சார்ஜ் செய்யாமல், வெறுமனே நின்று கொண்டிருக்கும்போது தீப்பிடித்து எரிந்தால் அதனை தானாக எரிதல் என்போம். இது விரிவான மோட்டார் காப்பீட்டில் கவர் ஆகும்.

இரண்டாவது வாகனம் வேறு எதுவும் செய்யாமல் சார்ஜ் செய்யப்பட்டு கொண்டு இருக்கும்போது, தீபிடித்து எரிந்தாலும் அது கவர் ஆகும்.

சில வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது தானாக தீப்பிடித்து எரிந்தால், அதுவும் விரிவான பாலிசியில் கவர் ஆகும்.

பொதுவான இன்சூரன்ஸ் தான்

பொதுவான இன்சூரன்ஸ் தான்

தற்போதைய நிலவரப்படி மற்ற வாகனங்களை போல மின்சார வாகனங்களும் காப்பீடு செய்யப்படுகின்றன. ஆக விரிவான காப்பீட்டு திட்டங்களை எடுப்பதே மின்சார வாகனங்களுக்கு சிறந்த வழியாக இருக்கும். அதேபோல உங்களது மின்சார வாகனத்தில் நிறுவனத்தின் அனுமதியின்றி ஏதேனும் பாகங்களை இணைத்திருந்தால், உங்களது இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாமல் போகலாம். ஆக அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் டீலர்களை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

இதனையும் கொஞ்சம் கவனிங்க?

இதனையும் கொஞ்சம் கவனிங்க?

பாலிசிதாரர்கள் எப்பொழுதும் பாலிசியில் உள்ளடக்கப்படாதவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஷார்ட் சர்க்யூட், எண்ணெய் கசிவு அல்லது அதிக வெப்பம் போன்ற இயந்திரக் குறைபாடுகள் பாலிசியில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. பாலிசிதாரர்களின் சொந்த அலட்சியம் அல்லது வேண்டுமென்றே ஏற்படும் தீ, பாலிசியில் உள்ளடக்கப்படாது. க்ளைம் கோருவதற்காக வாகனத்தை வேண்டுமென்றே தீ வைத்து எரிக்கக் கூடாது. இது நிச்சயமாக உங்கள் கோரிக்கையை நிராகரிக்க வழிவகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Electric vehicle fire accident; Can I make an insurance claim? is there insurance for EVs

Electric vehicle fire accident; Can I make an insurance claim? is there insurance for EVs/அடிக்கடி தீ பிடிக்கும் மின்சார ஸ்கூட்டர்கள்.. உங்களுடைய இன்சூரன்ஸில் கவர் ஆகுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.