இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் அதானி குழுமத்தின் பல பங்குகளும், அதன் உச்சத்தில் இருந்து பலமான வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளன. இது அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த சில பங்குகளானது, சமீபத்திய வாரங்களாக தொடர்ந்து சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
ஏன் இந்த சரிவு? என்ன காரணம்? என்னென்ன பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றன. இனி எப்படி இருக்கும்? நிபுணர்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
நடிகர் சூரி போல ஏமாறாமல் சொத்து வாங்குவது எப்படி?
பங்கு சந்தைகள் சரிவு
பில்லியனர் ஆன கெளதம் அதானியின் அதானி குழுமத்தில் உள்ள சில பங்குகள், அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து சரிவில் காணப்படுகின்றன. சர்வதேச அளவிலான ஈக்விட்டி சந்தையில் பல்வேறு பங்குகளின் விலையும் சரிவினைக் கண்டு வருகின்றது.
அதானி வில்மர்
சமீபத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி வில்மர் பங்கு விலையானது 33.60% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சமான 878.35 ரூபாயில் இருந்து, கடந்த அமர்வில் 583.25 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. மறுபுறம் சென்செக்ஸ் 12.66% சரிவினைக் கண்டு, 54,364.85 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது. இது அதன் லைஃப்டைம் உச்சம் 62,245.43 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது.
என்ன காரணம்
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற சந்தைக்கு மத்தியில், அதானி குழும பங்குகளில் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்திருக்கலாம். இதுவும் அதானி பங்குகள் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
அதானி கீரின் எனர்ஜி
அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது அதன் வரலாற்று உச்சமான 3048 ரூபாயில் இருந்து, மே 10, 2022 நிலவரப்படி 2486.80 ரூபாயாக உள்ளது. இது 18.41 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்
அதானி டிரான்ஸ்மிஷன் பங்கின் வரலாற்று உச்சம் 3000 ரூபாயாகும். இதன் பங்கு விலை கடந்த அமர்வில் 2475.10 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் 17.50 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது.
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன்
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன் பங்கு விலையானது, அதன் வரலாற்று உச்சமான 924.65 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 771.30 ரூபாயாக மே 10, 2022 அன்று குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 16.58 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது.
அதானி டோட்டல் கேஸ்
அதானி டோட்டல் கேஸ் பங்கின் வரலாற்று உச்சம் 2739.95 ரூபாயாகும். இது கடந்த அமர்வில் 2346.95 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது அதன் உச்சத்தில் இருந்து 14.34% சரிவினைக் கண்டுள்ளது.
அதானி பவர்
அதானி பவர் நிறுவனத்தின் வரலாற்று உச்சம் 312.30 ரூபாயாகும். கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 267.60 ரூபாயாகும். இந்த பங்கின் விலையானது உச்சத்தில் இருந்து 14.31% சரிவினைக் கண்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் வரலாற்று உச்சம் 2420 ரூபாயாகும். கடந்த அமர்வில் இப்பங்கின் விலை 2110.45 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இது அதன் உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 13% சரிவினைக் கண்டுள்ளது.
adani wilmar, adani power and other group stocks slumped up to 34% from All time high
adani wilmar, adani power and other group stocks slumped up to 34% from All time high/அதானி குழும பங்குகளினால் முதலீட்டாளர்கள் கவலை.. உச்சத்தில் இருந்து 34% வரை சரிவு.. ஏன்?