கொழும்பு: இலங்கை., பார்லியில் பெரும்பான்மை நிருபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் எனவும், அதிபருக்கானஅதிகாரத்தை குறைக்க தயார் எனவும் அதிபர் கோத்தபயராஜபக்சே தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலை காரணமாக கலவரம் மூண்டது. இதனையடுத்து தலைநகர் கொழும்புவில் ராணுவம் வீதி உலா வர துவங்கியது.இதனிடையே பிரதமர் பதவி வகித்து வந்த மகிந்த ராஜ பக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்
இந்நிலையில் அதிபர் பதவிவகித்து வரும் கோத்தபயராஜபக்சே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: இலங்கை., பார்லியில் பெரும்பான்மை நிருபிக்கும் அரசு சார்பில் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையும் உருவாக்கப்படும். வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் புதிய அரசு அமைந்த பின் அதிபருக்கான அதிகாரத்தை குறைத்துக்கொள்ள தயார். இலங்கையில் மக்கள் அமைதியை நிலைநாட்ட வேண்டும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம் . இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Advertisement