உலகை ஆட்டி படைத்துவரும் கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில்தான் முதன் முறையாக கண்டறியப்பட்டது.
அங்கிருந்து தான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது என்பதில் பல்வேறு நாட்டு மக்களுக்கு சீனா மீது இன்றும் கோபம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீன மக்கள் அதிர்ச்சி அடையும் விதத்திலும், பிற நாட்டு மக்கள் பரிதாபப்படும் வகையிலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்
கடந்த ஆண்டு இறுதியில் பெருமூளை அனுரிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அவர் இந்த நோய்க்கு றுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு பதிலாக பாரம்பரிய சீன மருந்துகளை உட்கொண்டதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
ராஜபக்சேவை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றது ஏன்? – அரசு விளக்கம்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட அரசு முறை பயணங்களின்போது இது தெரிய வந்தது.
இதனையடுத்து, பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே, வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை ஜி ஜின்பிங் தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.