அயோத்தியில் லதா மங்கேஷ்கரின் பெயரில் சாலை அமைக்க உத்திரபிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் இசைக்குயில் பழம்பெரும் பாடகியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். மும்பையை சேர்ந்த பாலிவுட்’ பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க… “நீங்காத ரீங்காரம் நீதானே” – தமிழில் வளையோசையென கலகலத்த லதா மங்கேஷ்கர்; ஒரு தொகுப்பு
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6-ம் தேதி காலமானார். அவரது மறைவு, திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்தது. இந்நிலையில் அவரது நினைவாக அயோத்தியில் புதிய சாலை அமைக்கப்பட்டு, பெயர் சூட்டப்படவுள்ளது. இதற்கான உத்தரவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM