ஒருவரின் வங்கிக் கணக்கில் ஓராண்டில் 20 இலட்ச ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை செலுத்தினாலோ, பணம் எடுத்தாலோ அவர்கள் ரொக்க நடவடிக்கைக்குப் பான் எண், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வங்கி மட்டுமல்லாமல், கூட்டுறவு வங்கி, அஞ்சலகங்களில் உள்ள கணக்குகளில் ரொக்க நடவடிக்கைக்கும் இது பொருந்தும் என்றும், இந்தப் புதிய விதி மே 26 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருநாளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை செலுத்தப் பான் எண் குறிப்பிடுவது ஏற்கெனவே கட்டாயமாக உள்ளது.