இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 2 வது சுற்றில் நோவக் ஜோகோவிச், நடால் வெற்றி..!

இத்தாலி,
செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று சிறப்பாக தொடங்கியுள்ளார்.

2-வது சுற்றில் ரஷிய வீரரான அஸ்லான் கரட்சேவை எதிர்கொண்ட ஜோகோவிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் இன்று நடைபெற்ற 2 வது சுற்று ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்காவின் ஜான் இஸ்னெரை 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.