இந்தியா ‘இந்த’ 5 விஷயத்தை தவிர்க்க முடியாது.. டாடா சந்திரேசகரன் சொல்வது என்ன..?!

இந்தியாவில் அனைத்து வணிகங்களும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மற்றும் தரவு அடிப்படையிலான தீர்வுக்கு இணங்க வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்காமல் யாரும் தப்ப முடியாது என்று டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) “Being Future Ready” என்ற தலைப்பில் நடத்திய விர்ச்சுவல் கூட்டத்தில் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஐந்து மெகா டிரெண்டுகளை டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பட்டியலிட்டார்.

3 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா?

முதல் மாற்றம்

முதல் மாற்றம்

என். சந்திரசேகரன் பட்டியலில் முதலில் இருப்பது டிஜிட்டல் அடாப்ஷன், அதாவது வேலையில் இருந்து ஹெல்த் முதல் கல்வி, ஷாப்பிங் வரையில் அனைத்து துறையும், அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் சேவைக்கள் கட்டாயம் வர வேண்டும். இதில் கைவிட்டால் பெரும் வர்த்தகத்தை இழக்க நேரிடும்.

கடந்த 5 வருடத்தில் AI, cloud, மற்றும் data technology இந்திய மக்கள் மற்றும் வர்த்தகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

இரண்டாவது மாற்றம்

இரண்டாவது மாற்றம்

இரண்டாவதாக விநியோகச் சங்கிலி, செயல்திறனுக்காக மட்டும் அல்லாமல் மீள் தன்மைக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும்.

இந்தியக் கண்ணோட்டத்தில், இது ஒரு பொன்னான வாய்ப்பு. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உருவாகும் வெற்றிடத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

மூன்றாவது மாற்றம்
 

மூன்றாவது மாற்றம்

அடுத்த மெகா டிரென்ட் நிலைத்தன்மை.

ஒருபுறம், பருவநிலை மீதான அழுத்தம் அதிகரிக்கப் போகிறது. இந்த மாற்றத்தை நோக்கி நாம் வைத்திருக்கும் எந்தவொரு திட்டமும் அழுத்தத்தின் கீழ் வரும் என்பதால் காலக்கெடு அதிகரிக்கும். இதற்கிடையில் நிலையான வர்த்தகம் விரிவாக்கத்தைச் சந்தையில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.

நான்காவது மாற்றம்

நான்காவது மாற்றம்

புதிய ஆற்றலை (நியூ எனர்ஜி) அடிப்படையாகக் கொண்ட வணிகங்களுக்கான உலகளவில் ஆதரவு அதிகரித்துள்ளது வேளையில், அனைத்து பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெறும். இதில் உருவாக்கப்படும் வர்த்தகம் தான் எதிர்காலம் எனவும் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் கூறியுள்ளார்.

ஐந்தாவது மாற்றம்

ஐந்தாவது மாற்றம்

மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஹைட்ரஜன், பேட்டரிகள், ஹைட்ரஜன் சேமிப்புத் தீர்வுகள் மற்றும் வட்ட பொருளாதாரத் தீர்வுகளை நோக்கி நகர்வதற்கு, கழிவு மேலாண்மை மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இப்பிரிவில் மட்டும் அதிகப்படியான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேவைப்படும் விலை உருவாகும் எனச் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata sons Chairman N Chandrasekaran list out five mega trends for future in CII Event

Tata sons Chairman N Chandrasekaran list out five mega trends for future in CII Event இந்தியா ‘இந்த’ 5 விஷயத்தைத் தவிர்க்க முடியாது.. டாடா சந்திரேசகரன் சொல்வது என்ன..?!

Story first published: Wednesday, May 11, 2022, 22:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.