இந்தியா – துருக்கி மத்தியிலான நட்புறவில் பாகிஸ்தானுக்கு ஆதரவும் செய்யும் காரணத்தால் சில விரிசல்கள் உள்ளது. இதன் காரணமாக டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ-வாகத் துருக்கி ஏர்லையன்ஸ் முன்னாள் உயர் அதிகாரியான இல்கர் ஆய்சி-ஐ நியமிக்க மறுத்து.
இந்த நிலையில் துருக்கி தற்போது அதிகப்படியான பணவீக்கம், உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் காரணத்தால் இந்தியாவின் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.
தி்டீர் பணத் தேவையா? வேகமாகக் கடன் பெற எளிய வழிகள்!
துருக்கி
முதன்முறையாக இந்தியாவில் இருந்து 50,000 டன் கோதுமையைத் துருக்கி ஆர்டர் கொடுத்துள்ளது. இது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் அதே வேளையில், இது நாட்டில் கோதுமை விலையை மேலும் அதிகரிக்கும், கோதுமை விலை ஏற்கனவே 15% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டதை அடுத்து, உலகச் சந்தையில் இந்திய கோதுமைக்கான தேவை அதிகரித்துள்ளதால், கோதுமை விலையும் இந்தியாவில் உயர்ந்துள்ளது.
கோதுமை
உலகின் உயர்தரக் கோதுமையில் ஐந்தில் ஒரு பங்கையும் மொத்த கோதுமையில் 7% உக்ரைன் உற்பத்தி செய்கிறது. ரஷ்யா – உக்ரைன் போரின் காரணமாக உக்ரைன், ரஷ்யாவில் இருந்து கோதுமை விநியோகம் தடைப்படச் சர்வதேச அளவில் விலை உயர்ந்துள்ளது.
இந்தியா
இந்திய கோதுமைக்குத் தற்போது உலகம் முழுவதும் டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் தனியார் வர்த்தகர்கள், விவசாயிகளிடம் இருந்து வாங்கும் கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலை கிடைப்பதால் அதிகப்படியான லாபம் கிடைக்கிறது.
ஏற்றுமதி
சர்வதேச சந்தைகளில் இருந்து அதிகப்படியான ஏற்றுமதி ஆர்டர்களைக் கிடைக்கும் நிலையில் இந்தியாவில் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட அசாதாரண வெப்ப நிலை கோதுமை பயிர்களின் விளைச்சலில் சரிவை கண்டது, இதுவும் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
125 கோடி ரூபாய்
துருக்கி மற்றும் இந்திய அரசுகளின் ஒப்புதல் மூலம் தனியார் எலக்ட்ரானிக் மண்டி அக்ரிபஜார், துருக்கியில் இருந்து 50,000 மெட்ரிக் டன் கோதுமையைத் தோராயமாக 125 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர் வந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
First time Turkey has placed wheat import order from India
First time Turkey has placed wheart import order from India இந்தியா – துருக்கி முதல் முறையாக வர்த்தகம்..!