இரண்டு புதிய நடைபாதை மற்றும் மேம்பாலங்கள் அமைக்க டெல்லி அரசு ஒப்புதல்

புது டெல்லி:
டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக  நேற்று நடைபெற்ற செலவின நிதி குழு கூட்டத்தில் துணை மந்திரி மணீஷ் சிசோடியா ரூ. 724.36 கோடி மதிப்பிலான நடைபாதை மற்றும் மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், பஞ்சாபி பாக் மற்றும் ராஜா கார்டன் இடையில்  ரூ.352.32 கோடி செலவிலும், அனந்த விஹார்  மற்றும் அப்சரா பார்டர்  இடையில் ரூ. 372.04 கோடி செலவிலும் நடைபாதை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
ராஜா கார்டன் மேம்பாலம் மற்றும் பஞ்சாபி பாக் மேம்பாலத்தின் இடையேயான நீளமானது தெற்கு டெல்லி, குருகிராம் மற்றும் இன்னும் பிற பகுதிகளை வடக்கு டெல்லியுடன் இணைக்கும் ரிங் ரோட்டின் முக்கிய பகுதியாகும். இப்பகுதியில் உள்ள ஒரு வழி மேம்பாலங்கள் மற்றும் குறைந்த கொள்ளளவு கொண்ட இணைப்புகளால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.  
அதனால் இப்பகுதியில் கட்டப்படும் நடைப்பாதை மற்றும் மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை குறைந்து  லட்சக்கணக்கான உள்மாநில பயணிகளின் துயர்நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும்,  இதில் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து தற்போதுள்ள கிளப் ரோடு வரை ஆறு வழிச்சாலை  மற்றும் உயர்த்தப்பட்ட நடைபாதைகள் அமைக்கும் பணியும் அடங்கும்.
இதுபோன்று, அனந்த விஹார் மற்றும் அப்சரா பார்டர் இடையில் அமைக்கப்படும் மேம்பாலத்திலும் ஆறு வழிச்சாலை மற்றும் உயர்த்தப்பட்ட நடைபாதைகள் அமைக்கப்படவுள்ளது.  இந்த நடைபாதைகளில் சுழற்சி பாதைகள் மற்றும் பல பயன்பாட்டு மண்டலங்கள் கட்டப்படவுள்ளன. பொதுமக்கள் மேம்பாலத்துடன் நேரடியாக இணைவதற்காக இரண்டு மேல் மற்றும் கீழ் சரிவுகள் அமைக்கப்பட உள்ளன. 
“இந்த மேம்பாலம் மற்றும் நடைபாதை அமைப்பதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள். கெஜ்ரிவால் அரசு போர்க்கால அடிப்படையில் நகரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசல்களைக் கண்டறிந்து, நெரிசலைக் குறைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது” என்று திட்டத்தின் விவரங்களை ஆய்வு செய்யும் போது சிசோடியா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.