மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் இருக்கைக்கு சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2022-23ஆம் ஆண்டின் பட்ஜெட்டை மதுரை மாநகர மேயர் இந்திராணி தாக்கல் செய்தார். மாமன்ற கூட்ட அரங்கிற்கு 100 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களும் வந்திருந்தனர். இந்நிலையில், திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைகளில் அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்தனர். இதனால், திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மேயர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நடைமுறைப்படி தங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, அடுத்த மாமன்றக் கூட்டத்தில் முறையாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என மேயர் உறுதியளித்ததால், அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக கூட்டம் துவங்கி பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM