இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்லுமா: இல்லை என்கிறது துாதரகம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில் நடக்கும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர, இந்திய ராணுவம் அங்கு செல்ல உள்ளதாக, அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தியை, நமது தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீவைத்து எரிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருகிறது.

latest tamil news

இதனையடுத்து, பொதுச்சொத்துகளை சூறையாடுபவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது இடையூறு செய்பவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்துமாறு இலங்கை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திரா ஷில்வா மறுத்துள்ளார்.

latest tamil news

இந்நிலையில், இலங்கையில் சில மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில், வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக இந்திய ராணுவம் வர உள்ளதாக தகவல் வெளியாகி பரவி வருகிறது.

latest tamil news

இதனை மறுத்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கு, ராணுவத்தை இந்தியா அனுப்ப உள்ளதாக சில மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை மறுக்க தூதரகம் விரும்புகிறது. இந்த தகவல் மற்றும் கருத்து ஆகியவை, இந்திய அரசின் நிலைப்பாட்டிறற்கு எதிரானது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரம் மீட்சிக்காக இந்தியா முழு உறுதுணையாக இருப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.