இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து 11 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுவினால் பிரதமர் பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததையடுத்து பல இடங்களில் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவி இருந்து விலகினார்.
Here are the three names submitted to the President. https://t.co/8MGeLN8Q1c
— Roel Raymond (@roelraymond) May 11, 2022
இந்தநிலையில் தற்போது 11 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுவினால் இலங்கையின் புதிய பிரதமருக்கான மூன்று பெயர்கள் அதிபரிடம் முன்மொழியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: இனி ஸ்வீடனை தாக்கினால்…பிரித்தானியா போரில் குதிக்கும்: புதிய ஒப்பந்தம் கையெழுத்து
இந்த முன்மொழியப்பட்டுள்ள மூன்று பெயரில், நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளன.
Wijeyadasa Rajapakshe
Dullas Alahapperuma
Nimal Siripala de Silva