இலங்கையில் வன்முறை தூண்டியவர்களை அடையாளம் கண்டுவிட்டோம்! பொலிஸ் எச்சரிக்கை


 நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.

திங்கட்கிழமை மே9ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 219 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மே11ம் திகதி இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலவரத்தின் போது வன்முறை தூண்டியது தொடர்புடைய 59 சமூக வலைத்தள குழுக்கள் மற்றும் அதன் அட்மின்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வன்முறை தூண்டியவர்களை அடையாளம் கண்டுவிட்டோம்! பொலிஸ் எச்சரிக்கை

12 மணிநேரம் மின்தடை ஏற்படும்.. இலங்கை மேலும் சீரழியும்! மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை 

அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

வீடுகள், வாகனங்கள் மற்றும் மற்ற சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த பல்வேறு சமூக வலைத்தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலமாக மக்களை இந்த குழுக்கள் திரட்டியுள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வன்முறை தூண்டியவர்களை அடையாளம் கண்டுவிட்டோம்! பொலிஸ் எச்சரிக்கை

மேலும், திங்கட்கிழமை நாடு முழுவதும் கலவரம் வெடித்த போது சமூக வலைத்தளம் மூலமாக வன்முறை தூண்டியதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.