இலங்கையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அசாதாரண சூழல் காரணமாக குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பியதாக வெளியான தகவலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
இலங்கையில் நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. வன்முறை சம்பவங்களால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 88 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 103 குடியிருப்புகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 8 பேரில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும் இருவர் தென் மாகாணத்திலும் நடந்த வன்முறையில் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே, குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
ஆனால், குறித்த தகவல்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளதுடன், அவை பொய்யான தகவல் என விளக்கமளித்துள்ளது.