இலங்கை சிறையில் இருந்த 58 கைதிகள் தப்பி ஓட்டம்: வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!

இலங்கையில் வெடித்துள்ள வன்முறையை தொடர்ந்து, அங்குள்ள சிறையில் இருந்த 58 சிறைக்கைதிகள் தப்பித்து ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தீவிரமான போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராடமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததை அடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது உறவினர்களின் வீடு மற்றும் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இலங்கை சிறையில் இருந்த 58 கைதிகள் தப்பி ஓட்டம்: வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!

இந்த வன்முறையானது இரண்டு நாட்களை கடந்தும் முடிவடையாத நிலையில் இலங்கையில் ஊரடங்கானது மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வன்முறை சம்பவங்கள் மற்றும் தீயிட்டு கொளுத்தும் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் இருந்த 58 கைதிகள் தப்பி ஓட்டம்: வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!

மேலும் இந்த வன்முறை சூழ்நிலையை பயன்படுத்தி 58 சிறைக்கைதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறையில் இருந்து தப்பித்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து தப்பித்த இந்த 58 சிறைக்கைதிகளும் கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழையலாம் என எச்சரிக்கை தகவலும் வெளியாகியுள்ளது.

இலங்கை சிறையில் இருந்த 58 கைதிகள் தப்பி ஓட்டம்: வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!

கூடுதல் செய்திகளுக்கு: ராணுவத்தால் தலையில் சுட்டுக்கொல்லபட்ட பத்திரிக்கையாளர்: சர்வதேச சமுகத்திடம் அல் ஜசீரா நிறுவனம் கோரிக்கை

இதையடுத்து இத்தகைய நுழைவை உடனடியாக தடுக்க தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை இந்திய கடற்படை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தபட்டு வருகிறது எனவும் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.