இலங்கை தலைநகர் கொழும்பு சாலைகளில் ஆயுமேந்திய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து செல்லும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மே9ம் திகதி கொழும்பில் அரசாங்க ஆதரவாளர்கள் அமைதியான போராட்டகாரர்களை தாக்கியதை அடுத்த இலங்கை முழுவதும் வன்முறை வெடித்தது.
கொழும்பு வன்முறையை தொடர்ந்து இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளை மே 12ம் திகதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை அன்று தலைநகர் கொழும்பு தெருக்களில் ராணுவ வாகனங்கள் மற்றும் படைகளை இலங்கை அதிகாரிகள் களமிறக்கியுள்ளனர்.
இதனிடையே, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு தெருக்களில் ராணுவ வாகனத்தின் மீது வீரர்கள் ஆயுதங்களுடன் அணி வகுத்து செல்லும் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் வெற்றிடம் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில் தலைநகரில் ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Another footage pic.twitter.com/pfx7ohFNmg
— Viraj Madhushan (@VirajMadhushan) May 11, 2022
மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்? உண்மையை உடைத்த இலங்கை பாதுகாப்பு செயலாளர்