இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?.. உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர ரோந்து பணி தீவிரம்

டெல்லி: தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. அன்று ராணுவ மற்றும் அரசு அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ராஜபக்சே குடும்பத்தினரால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தமிழர்கள் பகுதி பற்றி எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் குண்டுமழை… ரத்த வெள்ளத்தில் சடலங்கள்… மரண ஓலங்கள்… சரணடைய வந்தவர்கள் சுட்டுக்கொலை… கொஞ்சமும் ஈவு இரக்கம் கூட காட்டாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என கொடூரமாக சித்ரவதை செய்து கொன்று கொத்துக் கொத்தாக சாலையில் வீசி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அகதிகளுடன் தேச விரோதிகளும் நுழையலாம் என ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை: தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த வேண்டும். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக கடலோரப்பகுதிகளை தீவிர கண்காணிப்பில் தமிழக அரசு வைத்திருக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.