இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு படையினரால், சுட்டு கொலை செய்யப்பட்ட பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளரை சக பத்திரிக்கையாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காணொளி வெளியாகி உள்ளது.
அல்ஜசீரா செய்தி நிறுவன பத்திரிக்கையாளரான ஷிரீன் அபு, இஸ்ரேல் படைகள் ஜெனின் நகர அகதிகள் முகாமில் சோதனையிட்ட போது செய்தி சேகரித்து கொண்டிருந்தார்.
அப்போது இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவரது தலையில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக உடையை அவர் அணிந்திருந்த போதும், இஸ்ரேல் வீரர்களால் அவரை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றதாக அல்ஜசீரா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.