கீவ்:உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர், இரண்டரை மாதங்களை கடந்து விட்ட நிலையில், ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது, ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
ஒலியை விட, ஐந்து மடங்கு வேகத்தில், 2,000 கி.மீ., தொலைவு சென்று, இலக்கை தாக்கி அழிக்கும், ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில், ஒடேசாவில் உள்ள ஒரு வணிக வளாகம் பலத்த சேதம் அடைந்தது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே, கடந்த மார்ச்சில், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில், உக்ரைனில் உள்ள இஷியம் நகரில், ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில், 44 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டட இடிபாடுகளை அகற்றிய போது, அதில் சிக்கியிருந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடல் நலம் பாதிப்புரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக, சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், 1945ல், ஜெர்மனியின் நாஜி படைகள், ரஷ்யாவிடம் சரண் அடைந்த வெற்றி விழா மாஸ்கோவில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற புடின், கால்களை மறைத்து இருந்தார். அடிக்கடி இருமலும் இருந்தது. இது, புடின் உடல்நிலை சரியில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருந்தது.
Advertisement