மன அழுத்தம் மற்றும் மாசுபாடு ஆகியவை கூந்தலுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன, இதனால் நம் தலைமுடி உயிரற்றதாகவும், மெல்லியதாகவும், மந்தமாகவும் இருக்கிறது. எனவே இயற்கையாகச் செல்வது காலத்தின் தேவை.
இயற்கையான, விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உறுதிப்படுத்த, வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய சூப்பர் ஹேர் மாஸ்க் ரெசிபி இங்கே உள்ளது.
சூடான எண்ணெய் மசாஜ் கூட வழங்க முடியாத ஊட்டச்சத்தை, இந்த ஹேர் மாஸ்க் உங்களுக்கு வழங்கும். உண்மையில் நீங்கள் உங்கள் கூந்தலை பராமரிக்க விரும்பினா, இந்த ஹேர் மாஸ்க் உங்களுக்கு உதவும். இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவது,உங்கள் உச்சந்தலையை வலுப்படுத்தி, ஊட்டமளிப்பதோடு, உடையக்கூடிய தன்மை மற்றும் வறண்டு போவதை தடுக்கிறது.
உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்களால், நீங்களே செய்யக்கூடிய சூப்பர் ஹேர் மாஸ்க் ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்
ஒரு கிண்ணம் தயிர்
2 பழுத்த வாழைப்பழங்கள்
அலோ வேரா ஜெல்
2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
எப்படி செய்வது?
மிக்ஸி ஜாரில், நறுக்கிய இரண்டு வாழைப்பழங்கள், ஒரு கிண்ணம் தயிர் சேர்க்கவும். இதில், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 2-3 வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும். ஒரு நிமிடம் அரைக்கவும்.
உங்கள் தலைமுடியை ஒவ்வொரு வகுடாக பிரித்து பேஸ்டை தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும், வழக்கம் போல் கழுவி, உங்கள் தலைமுடியை நீங்கள் செய்வது போல் கண்டிஷனிங் செய்யவும்.
பலன்கள்
வாழைப்பழம் உங்கள் தலைமுடிக்கு சிறந்தது; பொடுகைத் தடுப்பதைத் தவிர, அவை உங்கள் உச்சந்தலையில் ஊட்டமளித்து, அதை ஈரப்பதமாக்குகிறது மற்றும் முடி நெகிழ்ச்சியையும் மேம்படுத்துகிறது.
தயிர், புரதம் நிறைந்தது மற்றும் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது மற்றும் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.
கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் புரோட்டியோலிடிக் என்சைம்களைக் கொண்டுள்ளது, இது உச்சந்தலையில் இறந்த சரும செல்களை சரிசெய்ய வேலை செய்கிறது.
இறுதியாக, வைட்டமின் ஈ எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்துகிறது மற்றும் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பிரகாசத்தை சேர்க்கிறது.
இதுவும் அவசியம்!
இதுதவிர, உலர்ந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சருமத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வீர்களோ, அதேபோன்று உங்கள் உச்சந்தலையிலும் எண்ணெய் தடவ வேண்டும். இது பாதுகாப்பானது. நீரேற்றம் மற்றும் ஆரோக்கியமான முடியை பராமரிக்க உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் உச்சந்தலை இயற்கையாகவே எண்ணெய் பசை இருந்தால்’ முடிக்கு மட்டுமே எண்ணெய் தடவவும், உச்சந்தலையைத் தவிர்க்கவும். இந்த வழியில் உங்கள் தலைமுடி மென்மையாகவும், உச்சந்தலையில் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதமாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“