ஊட்டியில் 124 வது மலர் கண்காட்சியை முன்னிட்டு 5.5 லட்சம் மலர் செடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறாமல் இருந்த 124வது மலர்கண்காட்சி வருகின்ற மே 20ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்த கண்காட்சி மே 20ஆம்தேதி தொடங்கி, மே 24-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. மேலும் இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனையடுத்து 275 ரகங்களில் 5.5 லட்சம் மலர் செடிகள் பார்வைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம், 35 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ண மலர் செடிகளை மாடங்களில் அலங்கரிக்கும் பணி நடைபெறுகிறது.