சிக்கமகளூரு : ”காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை குறி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் குறி, காங்கிரஸ் தான். நாட்டில் காங்கிரசை மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்,” என பா.ஜ., தேசிய பொது செயலர் சி.டி.ரவி தெரிவித்தார்.தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளரும், அக்கட்சியின் தேசிய பொது செயலருமான சி.டி.ரவி, சிக்கமகளூரில் நேற்று அளித்த பேட்டி:காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கனகபுராவில் மட்டுமே தன் பலத்தை நிரூபித்துள்ளார்.
உப்பு சாப்பிட்டவர்கள், தண்ணீர் குடிப்பர்; தவறு செய்தவர்கள், தண்டனை அனுபவிக்க வேண்டும். தவறு செய்யாமல் தான் அவர் சிறை சென்றாரா?உத்தர பிரதேசத்தில் பிரியங்கா தலைமையில் தேர்தலை சந்தித்தனர். 387 தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர். ஆட்சியில் இருந்த பஞ்சாபில் படுதோல்வியை சந்தித்தனர்.காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை குறி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் குறி காங்கிரஸ் தான். நாட்டில் காங்கிரசை மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.ம.ஜ.த., தலைவர் இப்ராகிமை, அரசியல் காமெடியர் என்பர். என் பார்வையில், அனைத்து முகங்களுக்கும் பொருந்தும் நபர். ஜனதா கட்சியில் இருந்தபோது, இந்திராவையும்; காங்கிரசில் இருந்த போது தேவகவுடாவையும் குற்றஞ்சாட்டி பேசினார்.அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் எங்கள் கட்சி தலைவர்கள். தலைவர்களை, தலைவராக மட்டுமே பார்க்கிறோம். எங்களுக்கு பாரத மாதா தான் கடவுள். அனைத்து கடவுள்களை விட பாரத மாதாவே பெரிய கடவுள்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement