எந்தெந்த வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு.. யாருக்குகெல்லாம் இஎம்ஐ அதிகரிக்கும்!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரத்தில் திடீரென வட்டி விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவீதமாக அதிகரித்தது.

இதற்கிடையில் ஏற்கனவே சில வங்கிகள் வட்டியினை அதிகரிக்க ஆரம்பித்திருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு பல வங்கிகளும் வட்டியினை உயர்த்த ஆரம்பித்துள்ளன.

பல வங்கிகளும் கடனுக்கான MCLR விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன. இதனால் கடனுக்கான மாத தவணை தொகையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 மாதத்தில் 44.73 பில்லியன் டாலர் மாயம்.. ரிசர்வ் வங்கி அடுத்தது என்ன செய்யும்..?!

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

தனியார் துறையினை சேர்ந்த ஐசிஐசிஐ வங்கி அதன் I-EBLR விகிதத்தினை ஆண்டுக்கு 8.10 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இந்த விகிதமானது மே 4, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. EBLR என்பது ரெப்போ விகிதம் போல வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதமாகும்.

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா வங்கியானது மே 5, 2022 முதல் அதன் சில்லறை கடன்களுக்கான BRLLR விகிதம் 6.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போதைய ரெப்போ விகிதம் 4.40% + MARK UP 2.50%, S.P. 0.25%. .

இதே இதன் எம்சிஎல்ஆர் விகிதம் மே 1 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒவர் நைட், 1 மாதம், 3 மாதம், 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் முறையே 6.60%, 7.05%, 7.10% மற்றும் 7.20% ஆகவும் உள்ளது. இதே 1 வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.25% ஆகவும், 3 வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.70% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி
 

கனரா வங்கி

கனரா வங்கியில் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனுக்கான விகிதம் (RLLR), மே 7, 2022 முதல் 7.30% ஆக அதிகரித்துள்ளது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா

யூனியன் பேங்க் ஆப் இந்தியா

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் கடைசியாக கடந்த மே 1, 2022 அன்று அப்டேட் செய்யப்பட்டது. அதன் இ பி எல் ஆர் (EBLR) விகிதன்ம் 6.80% ஆகும். இது ஆர்பிஐ-யின் ரெப்போ விகிதம் 4% + Spread 2.80% ஆகும்.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியாவினை பொறுத்தவரையில் வட்டி விகிதம் கடைசியாக மே 4, 2022 அன்று மாற்றம் செய்யப்பட்டது. இதன் ஆர்பிஎல்ஆர் (RBLR) விகிதம் 7.25% மாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டி விகிதமானது ஜூன் 1, 2022ல் இருந்து மாறவுள்ளது. இதன் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனுக்கான விகிதம் (RLLR), 6.90 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதன் எம்சிஎல்ஆர் விகிதமானது மே 1 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒவர் நைட், 1 மாதம், 3 மாதம் மற்றும் 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் முறையே 6.60%, 6.65%, 6.75% மற்றும் 6.95% ஆக உள்ளது. இதே இதன் 1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.25% 3 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.55% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹெச் டி எஃப் சி வங்கி

ஹெச் டி எஃப் சி வங்கி

ஹெச் டி எஃப் சி வங்கி மே 7 ம் தேதி முதல் அதன் எம் சி எல் ஆர் விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது.

இதன் படி ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் 7.15% ஆகும். இதே 1 வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் மற்றும் இரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் முறையே 7.50% மற்றும் 7.60% ஆகும். இதே 3 ஆண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.70% ஆகும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

எஸ்பிஐ வங்கியானது அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை கடந்த ஏப்ரல் 15, 2022 அன்று முதல் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது.

இதன் படி அதன் ஓவர் நைட், 1 மாதம், 2 மாதம், 3 மாதம், 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம், 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இதன் படி முறையே 6.75%, 6.75%, 6.75%, 7.05% என அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.10%, 2 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.30%, 3 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.40% ஆகும்.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

யெஸ் வங்கியின் எம்சிஎல்ஆர் விகிதம் 10 – 15 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மே 2, 2022ல் இருந்து நடைமுறையில் உள்ளது.

யெஸ் வங்கியின் இணையதள அறிக்கையின் படி, ஓவர் நைட், 1 மாதம் மற்றும் 3 மாதம், 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் முறையே, 6.85%, 7.30% மற்றும் 7.45%, 8.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே ஓராண்டுக்கான விகிதம் 8.60% ஆகும்.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கியின் வட்டி விகிதம் ஏப்ரல் 18, 2022 அன்று 5 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த விகிதமானது ஓவர் நைட், 1 மாதம், 3 மாதம் மற்றும் 6 மாதங்களுக்கு முறையே, 7.15%, 7.15%, 7.25% மற்றும் 7.30% ஆகவும் அதிகரித்துள்ளது. இதே ஓராண்டுக்கான விகிதம் 7.35% ஆகும், 2 ஆண்டுகளுக்கான விகிதம் 7.45% ஆகும். 3 ஆண்டுகளுக்கான விகிதம் 7.50% ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ICICI bank, HDFC bank, PNB and other: banks are hiked MCLR, loan EMIs will go up

ICICI bank, HDFC bank, PNB and other: banks are hiked MCLR, loan EMIs will go up/எந்தெந்த வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு.. யாருக்குகெல்லாம் இஎம்ஐ அதிகரிக்கும்!

Story first published: Wednesday, May 11, 2022, 12:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.