இந்தியாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்திற்கு இணையாக டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் தனது சேவையை 2ஆம், 3ஆம் தர நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது.
இந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தால் மட்டுமே வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதானி குழும பங்குகளினால் முதலீட்டாளர்கள் கவலை.. உச்சத்தில் இருந்து 34% வரை சரிவு.. ஏன்?
ஆன்லைன் சேவை நிறுவனம்
இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஆன்லைன் சேவை நிறுவனத்தில் போதுமான டெலிவரி ஊழியர்கள் இல்லாத காரணத்தால் தற்போது அதிகரித்துள்ள வர்த்தகத்தைச் சமாளிக்க முடியாமல் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் தடுமாறி வருகிறது. இதனால் நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.
ஐடி துறை
ஐடி துறையில் எப்படி அதிகப்படியான ப்ராஜெக்ட் கிடைத்தாலும் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் போட்டி நிறுவனங்களில் இருந்து ஊழியர்களைக் கைப்பற்றி வருகிறதோ இதே நிலை தான் தற்போது ஆன்லைன் சேவை துறையிலும் உருவாகியுள்ளது.
சோமேட்டோ, ஸ்விக்கி, Zepto
இதனால் சோமேட்டோ, ஸ்விக்கி, Zepto போன்ற நிறுவனத்தில் டெலிவரி நேரம் அதிகரித்துள்ளது, வர்த்தகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் டெலிவரி ஊழியர்கள் அடுத்தடுத்து வெளியேறி புதிய நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். ஊழியர்கள் வெளியேற்றத்திற்கு இதர பிற காரணமும் உள்ளது.
முக்கியக் காரணம்
வேலை சுமை, பெட்ரோல் விலை உயர்வு, வருமானம் குறைவு, போன்ஸ் தொகையில் சரிவு போன்றவற்றின் காரணமாகவும் டெலிவரி ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர். இதேபோல் கொரோனா நேரத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பலர் டெலிவரி சேவையில் பணியாற்றிய நிலையில் தற்போது நிலைமை சரியான பின்பு பழைய வேலைக்கே திரும்பியுள்ளனர்.
ஆன்லைன் டாக்ஸி சேவை
இதேபோல் தான் ஆன்லைன் டாக்ஸி சேவையில் பெட்ரோல், டீசல் உயர்வுக்கு இணையான தொகை ஓட்டுனர்களுக்கு அளிக்காத காரணத்தால் ஓட்டுனர்கள் வாடிக்கையாளரிடம் கூடுதல் கட்டணமும், பயணத்தைத் தொடர்ந்து ரத்தும் செய்யும் நிலையும் உருவாகியுள்ளது.
நிறுவனங்களுக்கு நெருக்கடி
இந்த இக்கட்டான சூழ்நிலையில் டிஜிட்டல் சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகத்தைத் தக்க வைக்கச் சேவை கட்டணத்தைக் குறைக்க வேண்டும். இதேபோல் டெலிவரி மற்றும் ஒட்டுனர்களைத் தக்க வைக்கக் கூடுதலான சம்பளத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Delivery workers Shortage: food-delivery, quick commerce startups struggling
Delivery workers Shortage: food-delivery, quick commerce startups struggling என்னடாது சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு வந்த சோதனை.. ஆளே இல்லையாம்..!