என் படங்கள் 100 கோடி வசூலித்ததால் சம்பளத்தை உயர்த்தவில்லை: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் நாளை மறுநாள் (13ம் தேதி) வெளிவருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள் அனிருத் இசையமைத்திருக்கிறார் அட்லியின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

படம் வெளி வருவதை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த படம் மாணவர்களின் பிரச்சனைகளையும், கனவுகளையும் பேசுகிற படம். இதில் நான் கல்லூரி மாணவனாகவும், பள்ளி மாணவனாகவும் நடித்திருக்கிறேன். பள்ளி மாணவனாக நடிக்க 8 கிலோ வரை எடை குறைத்தேன்.

கல்லூரியில் என்னுடன் படிக்கும் மாணவர்கள் என்னை டான் என்று செல்லமாக அழைப்பார்கள். அதனால் தான் படத்திற்கு டான் என்று டைட்டில் வைத்துள்ளோம் மற்றபடி நான் படத்தில் தாதாவாக நடிக்கவில்லை. எனது முந்தைய இரண்டு படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் நீங்கள் சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களா என்று கேட்கிறார்கள் சம்பளத்தை நான் உயர்த்தவில்லை எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்கிறார்கள்.

ஓடிடி தளம் என்பது தவிர்க்க முடியாதது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு அது மிகப்பெரிய தளம். ஆனால் ஓடிடி படங்களில் நடிக்கவோ, வெப் சீரிசில் நடிக்கவோ மாட்டேன். இப்போது எனது இலக்கு பெரிய திரைகள்தான்.

சினிமா இப்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது கொரோனா. காலத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு அதிகமாக வருகிறார்கள். நல்ல படங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்களை திட்டமிட்டு எடுத்தால் கண்டிப்பாக அது லாபம் தரும். பாடல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் என சினிமா வியாபாரத்தின் தளம் விரிந்திருக்கிறது.

ஒரு படம் எல்லா மொழி பேசும் மக்களால் விரும்பப்படும்போது ஒரு அது உலகப்படம் ஆகிறது. இந்திய மக்களால் விரும்பப்படும்போது அது பான் இந்தியா படமாகிறது. அடுத்து வரும் அயலான் படம் அத்தகைய படமாக இருக்கும்.

கமல்ஹாசன் தயாரிப்பில் நான் நடிக்கிறேன். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. ரஜினியுடன் நடிப்பதாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.