என் மீது 1000 வழக்குகள் பதிந்தாலும் கெஜ்ரிவாலை தொடர்ந்து கேள்வி கேட்பேன்- பாஜக தலைவர்

டெல்லி மாநில பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா கடந்த வாரம் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி போலீசாரால் கடத்தல் வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டு குருஷேத்திராவில் இருந்து அவர் டெல்லிக்கு அழைத்த வரப்பட்டார்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஹரியானா மற்றும் பஞ்சாம் நீதிமன்றம் வரும் ஜூலை 5-ம் தேதி வரை தஜிந்தரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

தனது கைது நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை தஜிந்தர் சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர், “குரு கிரந்த சாஹிப்பை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதி குறித்து கெஜ்ரிவாலிடம் தொடர்ந்து கேள்வி கேட்டேன். இதேபோல், பாஞ்சாபில் போதைப் பொருள் மாஃபியா மற்றும் மாநிலத்தில் காலிஸ்தான் கேஷங்கை எழுப்பும் பிரிவினைவாதிகள் குறித்தும் கேள்விகள் கேட்டேன். இது என் தவறா ? இதற்காக நான் ஒரு பயங்கரவாதியைப் போல கைது செய்யப்பட்டேன்.

என் மீது ஒன்று அல்ல 1000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் கெஜ்ரிவாலிடம் தொடர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. மகிந்த ராஜபக்‌சே இருக்கும் இடம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.