உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தனது மனைவியுடன் ஹரிதுவாரில் வசித்து வருகிறார். இவரது மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பிரசாந்த் தனது மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அது தொடர்பான புகார் மனுவில், எனது பணத்தை எல்லாம் கொடுத்து மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். இப்போது என்னிடம் பணம் இல்லை. வங்கியில் கடன் வாங்கிதான் வீடு கட்டினேன். பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும் நானும் எனது மனைவியும் சிரமப்படுகிறோம். அதனால், மகன் மற்றும் மருமகளிடம் இருந்து தலா ரூ.2.5 கோடி இழப்பீடாக கேட்டுள்ளோம்.
மேலும், பேரக்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் மகனுக்கு 2016-ம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தோம். நாங்கள் குழந்தையின் பாலினத்தைப் பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்கு தேவை ஒரு பேரக்குழந்தை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்..கோடை வெப்பம் எதிரொலி- பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்