ஓலா ஸ்கூட்டர்: தீ பிடிக்கும், வெடி வெடிக்கும்.. பாவிஷ் அகர்வால்-ன் விளக்கம்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடையும் வேளையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதில் முக்கியமாக இரு சக்கர வாகன பிரிவில் புதிதாகக் களமிறங்கிய ஓலா நிறுவனம் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

இந்த நிலையில் ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.

அடுத்தடுத்து வெளியேறும் உயர் அதிகாரிகள்.. ஆட்டம் காணும் ஓலா..!

 ஓலா ஸ்கூட்டர்

ஓலா ஸ்கூட்டர்

ஓலா ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் சிஇஏ-வான பாவிஷ் அகர்வால் இனி வரும் காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரியலாம், ஆனால் அது மிகவும் அரிதாக நடக்கும் விஷயமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

விசாரணை

விசாரணை

மார்ச் மாதத்தில் ஓலா உட்படப் பல முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டுகளின் தயாரிப்புகள் தீ பிடித்து எறிந்த நிலையில், பாதுக்காப்பு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் மத்தியில் இதற்கான விசாரணையைத் துவங்கியுள்ளது.

பாவிஷ் அகர்வால்
 

பாவிஷ் அகர்வால்

இந்நிலையில் பாவிஷ் அகர்வால் ஓலா எலக்ட்ரிக் நிறுவன கூட்டத்தில் பேசியது மீண்டும் மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் தனிப்பட்ட நிறுவன கூட்டத்தில் தீ பிடித்தது குறித்து எழுந்த கேள்விக்கு பாவிஷ் அகர்வால் “எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்வுகள் நடக்குமா என்றால், நடக்கலாம்” என்று பதில் அளித்துள்ளார்.

 தீர்வு காண தயார்

தீர்வு காண தயார்

ஆனால் பிரச்சனைக்கான தீர்வை ஆய்வு செய்து முறையாக அதைச் சரி செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாகவும், உறுதியாகவும் உள்ளோம் எனவும் பாவிஷ் அகர்வால் இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது

1400 எலக்ட்ரிக் ஓலா ஸ்கூட்டர்

1400 எலக்ட்ரிக் ஓலா ஸ்கூட்டர்

ஓலா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 50000 வாகனங்களுக்கு ஒரு வாகனம் தீபிடித்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் எலக்ட்ரிக் வாகனங்களில் மிகவும் அரிதாக நடக்கக் கூடியது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார். இந்தத் தீ விபத்துக்குப் பின்பு ஓலா சுமார் 1400 எலக்ட்ரிக் ஓலா ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெற்று ஆய்வு செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola Bhavish Aggarwal says e-scooter might get fire but its very rare in future

Ola Bhavish Aggarwal says e-scooter might get fire but its very rare in future ஓலா ஸ்கூட்டர்: தீ பிடிக்கும், வெடி வெடிக்கும்.. பாவிஷ் அகர்வால்-ன் விளக்கம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.