கச்சா எண்ணெய்க்கு தள்ளுபடி கொடுத்த சவுதி.. ஆனா அமெரிக்காவுக்கு மட்டும் இல்லை..!

உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ நிறுவனம் நான்கு மாதங்களில் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான விலையைக் குறைத்துள்ளது.

சவுதி அரேபிய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆரம்கோ நிர்வாகம் பல்வேறு காரணத்திற்காக ஞாயிற்றுக்கிழமை ஆசியச் சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு மட்டும் விலையைக் குறைத்துள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தை கடும் சோகத்தில் உள்ளது.

இந்தியாவின் திட்டம் பலிக்குமா.. கீழாக கச்சா எண்ணெய் கிடைக்குமா.. ரஷ்யாவின் முடிவு?

சவுதி ஆரம்கோ

சவுதி ஆரம்கோ

அரம்கோ அதன் முக்கிய ஏற்றுமதி தரமான அரபு லைட் கச்சா எண்ணெய்க்கான ஜூன் மாத விற்பனை விலையில் தனது பென்ச்மார்க் விலையில் சுமார் 4.40 டாலர் வரையில் ஒரு பேரலுக்குக் குறைத்துள்ளது.

அரபு லைட் கச்சா எண்ணெய்

அரபு லைட் கச்சா எண்ணெய்

சவுதி ஆரம்கோ மே மாதம் தனது அரபு லைட் கச்சா எண்ணெய்க்கான பென்ச்மார்க் ப்ரீமியம் விலையை 9.35 டாலாராக நிர்ணயம் செய்தது. இந்த அளவீட்டை உலக நாடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட போதும் குறைக்காத நிலையில் தற்போது குறைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய சந்தைக்கு மட்டும் குறைத்து அமெரிக்கச் சந்தைக்கான விலையைப் பழைய 9.35 டாலர் விலையில் வைத்துள்ளது.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்
 

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்

பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுப் பல முக்கிய நகரங்கள் லாக்டவுனில் மூழ்கியுள்ளது. இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சவுதி அரேபியா இந்த விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.

சீனா

சீனா

உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வு நாடாக விளங்கும் சீனா, சமீபத்தில் வெளியிட்ட பொருளாதாரக் தரவுகளை பார்க்கும் போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் உற்பத்தி மற்றும் வர்த்தகம் தேக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.40 டாலர் தள்ளுபடி

4.40 டாலர் தள்ளுபடி

இதன் மூலம் சீனா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு பெரிய அளவில் குறையும் என்பதால் சவுதி ஆராம்கோ உற்பத்தி மற்றும் விற்பனை அளவில் எவ்விதமான சரிவும் இருக்கக் கூடாது என்பதற்காக 4.40 டாலர் வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த நிலையில் அமெரிக்காவுக்கான கச்சா எண்ணெய்க்கு மட்டும் தள்ளுபடி அளிக்காதது பெரும் சர்ச்சையாக உள்ளது. 2021 தரவுகள் படி அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி சுமார் 6 சதவீத எண்ணெய் அளித்து வரும் நிலையில் தள்ளுபடி மறுப்பு பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Saudi Aramco cuts oil prices only for Asia; selling price for USA unchanged

Saudi Aramco cuts oil prices only for Asia; selling price for USA unchanged கச்சா எண்ணெய்க்கு தள்ளுபடி கொடுத்த சவுதி.. ஆனா அமெரிக்காவுக்கு மட்டும் இல்லை..!

Story first published: Tuesday, May 10, 2022, 17:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.